kalimah.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

vijay yesudas feat. sj suryah - nee poiya كلمات أغنية

Loading...

நான் காண்பது இங்கு உண்மையா
ஏ உயிரே என் உயிரே
நீ சாகாதிரு
நான் வாழ்வதே இங்கு உண்மையா
என் மனமே என் மனமே
நீ வீழாதிரு
எனை சுட்ட நிலவு பொய்யா
எனை தொட்ட தென்றல் பொய்யா
நீ இட்ட முத்தம் பொய்யா
பெண்ணே நீ மெய்யா இல்லை பொய்யா
சிறு ஒரு இதயத்தை மறுபடி மறுபடி
உலகமே மிதித்ததுடி
வலியிலும் துயரிலும் குழம்பிய இருதயம்
உனக்கென துடித்ததடி
வீழ்கையில் நான் வீழ்கையில்
உன் காதல் தாங்குமடி
நீயுமே பொய்யாகினால் என் உயிரே நீங்குமடி…
நீ பொய்யா…
யார் கேட்டது இந்த காதலை
ஏ விழியே நீ அவளை ஏன் காட்டினாய்

யார் கேட்டது இந்த பொய்யினை…
என் மனமே … நீ என்னையே ஏன் ஏமாற்றினாய்
அவள் ஊடல் முழுவதும் பொய்யா
அவள் விழியின் மொழிகள் பொய்யா
அவள் முத்தம் மொத்தம் பொய்யா
எனக்காய் துடித்தாலே அது பொய்யா
கனவுகள் நிலைவதும்
கனவுகள் கலைவதும்
தினம் தினம் நிகழ்வதடி
ஒரு யுக நினைவினை நொடியினில்
உடைப்பது கொடுமையின் கொடுமையடி
பிள்ளைப்போல் சிறு பிள்ளைப்போல்
என் நெஞ்சம் கொண்டிருந்தேன்
முள்ளைப்போல் ஒரு முள்ளைப்போல்
அதில் உன்னை சுமந்திருந்தேன்
கிளையின்றி
காற்றின்றியே எங்கு வாசமோ
ஏ மலரே ஏன் இதழால் நீ பொய் பேசினாய்
வானின்றியே இங்கு தூரலா
ஏ முகிலோ ஏன் துளியாய் நீ பொய் பேசினாய்
அவள் விழியின் கண்மை உண்மை
அவள் இதழின் மென்மை உண்மை
அவள் பெண்மை கூட உண்மை
மெய்யே பொய் என்றால்
எது உண்மை
அவளையும் இசையையும் எனது இரு விழியென
உலகத்தை ரசித்திருந்தேன்
விழிகளில் பிழை இல்லை உலகமே விடுமென
இருண்டிட குழம்பி நின்றேன்
ஐம்புலன் என் ஐம்புலன்
உனை ஐயம் கொள்ளுதடி
நெஞ்சமோ என் நெஞ்சமோ
அதை ஏற்றிட மறுக்குதடி
எது உண்மை…
எது உண்மை…

كلمات أغنية عشوائية

كلمات الأغنية الشائعة حالياً

Loading...