kalimah.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

thomas kingstone samuel - um vasanam كلمات أغنية

Loading...

[verse]
புரியாத கேள்விகள்
அறியாத நிகழ்வுகள்
இவை யாவும் தெரிந்திட
மனம் தான் ஏங்கும்
விடிகாலை பொழுதினில்
உலகத்தின் அமைதியில்
உம் வார்த்தை கேட்டிட
மனம் தான் ஏங்கும்

[pre chorus]
அதன் வார்த்தைகள்
என்னில் பேசுமே
இதயத்தினுள்
சென்று மாற்றுமே
உயிர் அணுக்களை
அவை உருக்கியே
உயர் பாதைக்கு
வழி காட்டுமே

[chorus]
உம் வசனம்
என் பாதைக்கு
தீபமானதாலே
என் வாழ்வினில்
இனி இருளினை
நான் காண்பதில்லையே
உம் வார்த்தை
என் வாழ்விற்கு
வெளிச்சமானதாலே
நான் போகிற பாதையில்
தடுமாற்றம் இல்லையே
[verse]
நான்
எனை மறக்கிறேன்
உம் வார்த்தைகள்
நினைத்து ரசிக்கிறேன்
உலகம் எழுப்பும் கேள்விக்கு
உம் வசனத்தில்
விடை காண்கிறேன்

[hook]
நடந்ததும் நடப்பதும் நடக்கவிருப்பதும்
யாவுமே இதனிலே எழுதப்பட்டதே
உலகிலே மானிடர் வாழும் நாளெல்லாம்
உன்னத மேன்மைக்கு வழிகாட்டும் வசனமே

[verse]
புரியாத கேள்விகள்
அறியாத நிகழ்வுகள்
இவை யாவும் தெரிந்திட
மனம் தான் ஏங்கும்
விடிகாலை பொழுதினில்
உலகத்தின் அமைதியில்
உம் வார்த்தை கேட்டிட
மனம் தான் ஏங்கும்

[pre chorus]
உம் வார்த்தைகள்
தியானிக்கையில்
என் உள்ளத்தில்
மாற்றம் பார்க்கிறேன்
என் மனதினில்
உள்ள பாரங்கள்
கரைந்து போனதால்
நானும் பறக்கிறேன்
[chorus]
உம் வசனம்
என் பாதைக்கு
தீபமானதாலே
என் வாழ்வினில்
இனி இருளினை
நான் காண்பதில்லையே
உம் வார்த்தை
என் வாழ்விற்கு
வெளிச்சமானதாலே
நான் போகிற பாதையில்
தடுமாற்றம் இல்லையே

உம் வசனம்
என் பாதைக்கு
தீபமானதாலே
என் வாழ்வினில்
இனி இருளினை
நான் காண்பதில்லையே
உம் வார்த்தை
என் வாழ்விற்கு
வெளிச்சமானதாலே
நான் போகிற பாதையில்
தடுமாற்றம் இல்லையே

كلمات أغنية عشوائية

كلمات الأغنية الشائعة حالياً

Loading...