kalimah.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

saindhavi - abirami andhadhi كلمات الأغنية

Loading...

காப்பு
தாரமர் கொன்றையும் செண்பக மாலையும் சாத்தும்தில்லை
ஊரர்தம் பாகத்து உமைமைந்தனே! உலகேழும் பெற்ற
சீர் அபிராமி அந்தாதி எப்போதும் எந்தன் சிந்தையுள்ளே
காரமர் மேனிக் கணபதியே! நிற்கக் கட்டுரையே.

நூல்
மதிக்கின்ற மாணிக்கம், மாதுளம்போது மலர்க்கமலை
துதிக்கின்ற மின்கொடி, மென்கடிக் குங்கும தோயம் என்ன
விதிக்கின்ற மேனி அபிராமி என்தன் விழுத்துணையே

2 துணையும், தொழும்தெய்வமும் பெற்றதாயும், சுருதிகளின்
பணையும், கொழுந்தும் பதிகொண்ட வேரும்பனி மலர்ப்பூங்
கணையும், கருப்புச்சிலையும், மென் பாசாங்குசமும், கையில்
அணையும் திரிபுர சுந்தரி ஆவது அறிந்தனமே

3.அறிந்தேன் எவரும் அறியா மறையை, அறிந்துகொண்டு
செறிந்தேன், உனது திருவடிக்கே,. திருவே! வெருவிப்
பிறிந்தேன், நின் அன்பர் பெருமை எண்ணாத கருமநெஞ்சால்
மறிந்தே விழுநரகுக்கு உறவாய மனிதரையே!

குனிதரும், சேவடிக்கோமளமே! .கொன்றை வார்சடைமேல்
பனிதரும், திங்களும், பாம்பும் பகீரதியும் படைத்த
புனிதரும் நீயும்மென்புந்தி எந்நாளும் பொருந்துகவே.

வருந்திய வஞ்சி மருங்குல் மனோன்மணி! வார்சடையோன்
அருந்திய நஞ்சு அமுதுக்கிய அம்பிகை அம்புயம் மேல்
திருந்திய சுந்தரி, அந்தரி, பாதம் என் சென்னியதே.

மன்னியது உன்திரு மந்திரம் சிந்துர வண்ணப் பெண்ணே
முன்னிய நின் அடியாருடன் கூடி, முறை முறையே
பன்னியது, என்றும் உந்தன் பரமாகம பத்ததியே

கதியுறு வண்ணம் கருதுகண்டாய் கமலாலயனும்
மதியுறு வேணி மகிழ்நனும், மாலும், வணங்கி என்றும்
துதியுறு சேவடியாய். சிந்துரானன சுந்தரியே!

வந்தரி, சிந்துர வண்ணத்தினாள், மகிடன் தலைமேல்
அந்தரி, நீலி, அழியாத கன்னிகை, ஆரணத்தோன்
கந்தரி கைத்தலத்தாள் மலர்த்தாள் என் கருத்தனவே.

பெருத்தன, பால் அழும் பிள்ளைக்கு நல்கின, பேர் அருள்கூர்
திருத்தன பாரமும், ஆரமும், செங்கைச் சிலையும், அம்பும்,
முருத்தன மூரலும், நீயும், அம்மே! வந்து என்முன் நிற்கவே

என்றும் வணங்குவது உன்மலர்த்தாள்! எழுதாமறையின்
ஒன்றும் அரும் பொருளே! அருளே! உமையே! இமயத்து
அன்றும் பிறந்தவளே! அழியாமுத்தி ஆனந்தமே!

வான் அந்தமான வடிவுடையாள், மறை நான்கினுக்கும்
தான்ந்தமான, சரணார விந்தந் தவளநிறக்
கானம்ந்தம் ஆடரங்காம் எம்பிரான் முடிக் கண்ணியதே.

பண்ணியது உன் இரு பாதாம் புயத்தில், பகல் இரவா
நண்ணியது உன்னை நயந்தோர் அவையத்து. நான்முன்செய்த
புண்ணியம் ஏது? என் அம்மே! புவி ஏழையும் பூத்தவளே!

காத்தவளே! பின் கரந்தவளே! கறைக் கண்டனுக்கு
மூத்தவளே! என்றும் மூவா முகுந்தற்கு இளையவளே!
மாத்தவளே! உன்னை அன்றி மற்றோர் தெய்வம் வந்திப்பதே

சிந்திப்பவர், நற்றிசைமுகர் நாரணர் சிந்தையுள்ளே
பந்திப்பவர், அழியாப்பர மானந்தர், பாரில் உன்னைச்
சந்திப்பவர்க்கு எளிதாம்- எம்பிராட்டி! நின் தண்ணளியே!

மண்ணளிக்கும் செல்வமோ பெறுவார்? மதி வானவர்தம்
விண்ணளிக்கும் செல்வமும், அழியாமுத்தி வீடும், அன்றோ?
பண்ணளிக்கும் சொற் பரிமள யாமளைப் பைங்கிளியே!

ஒளியே, ஒளிரும் ஒளிக்கு இடமே, எண்ணில் ஒன்றும் இல்லா
வெளியே, வெளிமுதற் பூதங்களாகி விரிந்த அம்மே!
அளியேன் அறிவு அளவிற்கு அளவானது அதிசயமே!

துதிசய வானன சுந்தரவல்லி, துணை இரதி
பதிசய மானது அபசயம் மாக, முன் பார்த்தவர் தம்
மதிசய மாக அன்றோ வாம பாகத்தை வவ்வியதே.

செவ்வியும், உங்கள் திருமணக் கோலமும், சிந்தையுள்ளே
அவ்வியம் தீர்த்து என்னை ஆண்ட பொற்பாதமும் ஆகிவந்து
வெவ்விய காலன் என் மேல்வரும் போது, வெளிநிற்கவே

களிநின்ற வெள்ளம் கரை கண்டதில்லை, கருத்தினுள்ளே
தெளிகின்ற ஞானம் திகழ்கின்றது என்ன திருவுளமோ?-
ஒளிநின்ற கோணங்கள் ஒன்பதும் மேவி உறைபவளே!

அறைகின்ற நான்மறையின் அடியோ? முடியோ? அமுதம்
நிறைகின்ற வெண்திங்களோ? கஞ்சமோ? எந்தன் நெஞ்சகமோ?
மறைகின்ற வாரிதியோ? பூரணாசல மங்கலையே?

similar threads: thiruvasagam lyrics in tamilthiruvasagam lyrics in tamil & english… thiruppugazh lyrics in tamilaigiri nandini lyrics in tamilaigiri nandini lyrics in tamil

last edited by rudhraa; 29th nov 2012 at 04: 17 pm.

universal rule never change!
what you send out, comes back.
what you sow, you reap.
what you give, you get.

bagavad gita discussion group| must read motivational books!

rudhraa said: 29th nov 2012 03: 55 pm

re: abirami anthathi lyrics in tamil

சங்குலை செங்கைச் சகலகலாமயில் தாவுகங்கை
பொங்கலை தங்கும் புரிசடையோன் புடையாள், உடையாள்
பிங்கலை, நீலி, செய்யாள், வெளியாள், பசும்பெண் கொடியே!

படியே! மறையின் பரிமளமே, பனி மால் இமயப்
பிடியே, பிரமன் முதலாய தேவரைப் பெற்ற அம்மே.
அடியேன் இறந்து இங்கு இனிப்பிறவாமல் வந்து ஆண்டு கொள்ளே.

விள்ளேன், பரசமயம் விரும்பேன், வியன் மூவுலகுக்கு
உள்ளே, அனைத்தினுக்கும் புறம்பே, உள்ளத்தேவிளைந்த
கள்ளே, களிக்கும் களியே, அளிய என்கண்மணியே.

அணியே, அணியும் அணிக்கழகே, அணுகாதவர்க்குப்
பிணியே, பிணிக்கு மருந்தே, அமரர் பெருவிருந்தே.
பணியேன் ஒருவரை நின்பத்ம பாதம் பணிந்தபின்னே.

முன்னே தவங்கள் முயன்றுகொண்டேன் முதல் மூவருக்கும்
அன்னே. உலகுக்கு அபிராமி என்னும் அருமருந்தே.
என்னே இனி உன்னையான் மறவாமல் நின்று ஏத்துவனே.

காத்தும் அழித்தும் திரிபவராம், கமழ் பூங்கடம்பு
சாத்தும் குழல் அணங்கே மணம் நாறும் நின்தாளிணைக்குகென்
நாத்தங்கு புன்மொழி ஏறிய வாறு நகையுடைத்தே.

படைத்தனை, பத்ம பதயுகம் சூடும் பணி எனக்கே
அடைத்தனை, நெஞ்சத்து அழுக்கை எல்லாம் நின் அருட்புனலால்
துடைத்தனை, சுந்தரி! நின் அருள் ஏதென்று சொல்லுவதே?

புல்லும் பரிமளப் பூங்கொடியே. நின் புதுமலர்த்தாள்
அல்லும் பகலும் தொழும் அவர்க்கே, அழியா அரசும்
செல்லும் தவநெறியும் சிவலோகமும் சித்திக்குமே.

சக்தியும், சக்தி தழைக்கும் சிவமும் தவம்முயல்வார்
முத்தியும், முத்திக்கு வித்தும் வித்தாகி முளைத்தெழுந்த
புத்தியும் புத்தியின் உள்ளே புரக்கும் புரத்தை அன்றே.

நன்றே உனக்கினி நான் என் செயினும் நடுக்கடலுள்
சென்றே விழினும், கரையேற்றுகை நின் திருவுளமோ
ஒன்றே, பல உருவே, அருவே, என் உமையவளே.

கெமையும் தமக்கன்புசெய்யவைத்தார், இனி எண்ணுதற்குச்
சமயங்களும் இல்லை, ஈன்றெடுப்பாள் ஒரு தாயும் இல்லை,
அமையும், அமையுறு தோளியர் மேல் வைத்த ஆசையுமே.

பாசத்தில் அல்லற்பட இருந்தேனை, நின் பாதம் என்னும்
வாசக் கமலம் தலைமேல் வலியவைத்து ஆண்டு கொண்ட
நேசத்தைஎன் சொல்லுவேன்? ஈசர்பாகத்து நேரிழையே.

அழைக்கும் பொழுதுவந்து, அஞ்சல் என்பாய். அத்தர் சித்தம் எல்லாம்
குழைக்கும் களபக் குவிமுலை யாமளைக் கோமளமே.
உழைக்கும்பொழுது, உன்னையே அன்னையே என்பன் ஓடிவந்தே

தந்தே பரிவொடு தான்போய் இருக்கும் சதுர்முகமும்,
பைந்தேன் அலங்கற் பருமணி ஆகமும், பாகமும் பொற்
செந்தேன் மலரும், அலர்கதிர் ஞாயிறும், திங்களுமே.

எங்கட் கொருதவம் எய்தியவா, எண் இறந்தவிண்ணோர்
தங்கட்கும் இந்தத் தவம்எய்து மோதரங் கக்கடலுள்
வெங்கட்பணி அணை மேல்துயில் கூரும் விழுப்பொருளே.

மருளே, மருளில் வரும்தெருளே, என் மனத்து வஞ்சத்து
இருள் ஏதும் இன்றி ஒளிவெளி ஆகியிருக்கும் உன்தன்
அருள் ஏதறிகின்றிலேன் அம்புயாதனத்து அம்பிகையே.

மெய்க்கே அணிவது வெண்முத்து மாலை, விடஅரவின்
பைக்கே அணிவது பண்மணிக் கோவையும் பட்டும், எட்டுத்
திக்கே அணியும் திருவுடையானிடம் சேர்பவளே.

தவளத் திருநகையும் துணையா, எங்கள் சங்கரனைத்
துவளப் பொருது, துடியிடை சாய்க்கும் துணை முலையாள்
அவளைப் பணிமின் கண்டீர் அமராவதி ஆளுகைக்கே.

மீளுகைக்கு, உன்தன் விழியின் கடை உண்டு, மேல் இவற்றின்
மூளுகைக்கு, என் குறை, நின்குறையே அன்று, முப்புரங்கள்
மாளுகைக்கு அம்பு தொடுத்த வில்லான் பங்கில் வாணுதலே.

பேணுதற் கெண்ணிய எம்பெருமாட்டியைப் பேதைநெஞ்சில்
காணுதற் கண்ணியள் அல்லாத கன்னியைக் காணும் அன்பு
பூணுதற்குகெண்ணிய எண்ணம்ன்றோ, முன்செய் புண்ணியமே.

كلمات أغنية عشوائية

كلمات الأغاني الشهيرة

Loading...