kalimah.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

p. susheela feat. t. m. soundararajan - malarndhum malaradha كلمات أغنية

Loading...

பெ: மலர்ந்தும் மலராத பாதி மலர் போல வளரும் விழி வண்ணமே
வந்து விடிந்தும் விடியாத காலை பொழுதாக விளைந்த கலை அன்னமே
நதியில் விளையாடி கொடியில் தலைசீவி நடந்த இளந்தென்றலே

வளர் பொதிகை மலை தோன்றி மதுரை நகர் கண்டு பொலிந்த தமிழ் மன்றமே
ஆ: மலர்ந்தும் மலராத பாதி மலர் போல வளரும் விழி வண்ணமே
வந்து விடிந்தும் விடியாத காலை பொழுதாக விளைந்த கலை அன்னமே
நதியில் விளையாடி கொடியில் தலைசீவி நடந்த இளந்தென்றலே
வளர் பொதிகை மலை தோன்றி மதுரை நகர் கண்டு பொலிந்த தமிழ் மன்றமே
ஆ: யானைபடை கொண்டுசேனைபல வென்று ஆளப்பிறந்தாயடா புவி ஆளப்பிறந்தாயடா
அத்தைமகளை மணம் கொண்டு இளமை வழி கண்டு வாழபிறந்தாயடா
வாழ பிறந்தாயடா
அத்தைமகளை மணம் கொண்டு இளமை வழி கண்டு
அத்தை மகளை மணம் கொண்டு இளமை வழி கண்டு வாழபிறந்தாயடா
பெ: தங்க கடியாரம் வைரமணியாரம் தந்து
மணம் பேசுவார் பொருள் தந்து மணம் பேசுவார்
மாமன் தங்கை மகளான மங்கை உனக்காக உலகை விலை பேசுவார் உலகை விலை பேசுவார்
மாமன் தங்கை மகளான மங்கை உனக்காக
மாமன் தங்கை மகளான மங்கை உனக்காக உலகை விலை பேசுவார்
ஆ: நதியில் விளையாடி கொடியில் தலைசீவி நடந்த இளந்தென்றலே
வளர் பொதிகை மலை தோன்றி மதுரை நகர் கண்டு பொலிந்த தமிழ்மன்றமே
பெ: சிறகில் எனை மூடி அருமை மகள் போல வளர்த்த கதை சொல்லவா
கனவில் நினையாத காலன் இடை வந்து பிரித்த கதை சொல்லவா
பிரித்த கதை சொல்லவா
ஆ: கண்ணில் மணி போல மணியின் நிழல் போல கலந்து பிறந்தோமடா
இந்த மண்ணும் கடல் வானும் மறைந்து முடிந்தாலும் மறக்க முடியாதடா
உறவை பிரிக்க முடியாதடா
பெ: அன்பே ஆரிராராரோ ஆரிராராரோ ஆரிராராரிரோ அன்பே ஆரிராராரிரோ
அன்பே ஆரிராராரிரோ

كلمات أغنية عشوائية

كلمات الأغنية الشائعة حالياً

Loading...