
ostan stars - dhayavu - john jebaraj كلمات أغنية
தலைமுறைகள்
தாண்டி நிற்கும் தயவு
தலை நிமிர்ந்து
வாழ செய்யும் தயவு
தலைமுறைகள்
தாண்டி நிற்கும் தயவு
என் தலை நிமிர்ந்து
வாழ செய்யும் தயவு
பாரபட்சம் பார்க்காத தயவு
எளியவனை உயர்த்தி வைக்கும் தயவு
தலைமுறைகள் தாண்டி நிற்கும் தயவு
உங்க தயவு பெரியதே
உங்க தயவு சிறந்ததே
உங்க தயவு என்னை
சேதமின்றி பாதுகாத்ததே
உங்க தயவு பெரியதே
உங்க தயவு சிறந்ததே
உங்க தயவு என்னை
சேதமின்றி பாதுகாத்ததே
ஒரு சேதமின்றி
தலைமுறையாய் பாதுகாத்ததே
1.குறிபார்த்து எறியப்பட்ட
சவுலின் அம்புகள்
திசை மாறி போக செய்த
தயவு பெரியதே
எனை குறிபார்த்து எறியப்பட்ட
சவுலின் அம்புகள்
திசை மாறி போக செய்த
தயவு பெரியதே
ஒரு அடியின் தூரத்திலே
கண்ட மரணத்தை
தடுத்து நிறுத்தி பாதுகாத்த
தயவு பெரியதே
இந்த தயவை பாட
ஜீவன் உள்ளதே
உங்க தயவு பெரியதே
உங்க தயவு சிறந்ததே
உங்க தயவு என்னை
சேதமின்றி பாதுகாத்ததே
உங்க தயவு பெரியதே
உங்க தயவு சிறந்ததே
உங்க தயவு என்னை
சேதமின்றி பாதுகாத்ததே
ஒரு சேதமின்றி
தலைமுறையாய் பாதுகாத்ததே
2.சுற்றி நின்ற ஜலங்கள் எல்லாம்
அமிழ்ந்து போனதே
என் பேழை மட்டும் பத்திரமாய்
மலையில் நின்றதே
சுற்றி நின்ற ஜலங்கள் எல்லாம்
அமிழ்ந்து போனதே
என் பேழை மட்டும் பத்திரமாய்
மலையில் நின்றதே
மூழ்கும் என்று எதிர்பார்த்த
கண்கள் தோற்றதே
ஏறெடுத்து பார்க்கும் வண்ணம்
உயர்த்தி வைத்ததே
என்னை உயர உயர
கொண்டு செல்லுதே
உங்க தயவு பெரியதே
உங்க தயவு சிறந்ததே
உங்க தயவு என்னை
சேதமின்றி பாதுகாத்ததே
உங்க தயவு பெரியதே
உங்க தயவு சிறந்ததே
உங்க தயவு என்னை
சேதமின்றி பாதுகாத்ததே
ஒரு சேதமின்றி
தலைமுறையாய் பாதுகாத்ததே
தலைமுறைகள்
தாண்டி நிற்கும் தயவு
தலை நிமிர்ந்து
வாழ செய்யும் தயவு
பாரபட்சம் பார்க்காத தயவு
எளியவனை உயர்த்தி வைக்கும் தயவு
தலைமுறைகள் தாண்டி நிற்கும் தயவு
உங்க தயவு பெரியதே
உங்க தயவு சிறந்ததே
உங்க தயவு என்னை
சேதமின்றி பாதுகாத்ததே
உங்க தயவு பெரியதே
உங்க தயவு சிறந்ததே
உங்க தயவு என்னை
சேதமின்றி பாதுகாத்ததே
ஒரு சேதமின்றி
தலைமுறையாய் பாதுகாத்ததே
كلمات أغنية عشوائية
- koven - never have i felt this كلمات أغنية
- dj fresh (uk) - louder (flux pavilion & doctor p remix) كلمات أغنية
- lars lilholt band - gir du mig lov كلمات أغنية
- alpha (rnb) - a little poison (languis remix) كلمات أغنية
- sajsi mc - 8 ujutru كلمات أغنية
- the owls - the art of war كلمات أغنية
- bromstad billionaires - kakk opp كلمات أغنية
- eliots, melikols - vecās lentas كلمات أغنية
- alex & sierra - back to you كلمات أغنية
- errdeka - im zauberwald skit كلمات أغنية