kalimah.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

malaysia vasudevan feat. s. janaki - panju mittai كلمات أغنية

Loading...

அடியே பஞ்சு மிட்டாய் சேலை கட்டி
பட்டுவண்ண ரவிக்கை போட்டுக்

அடியே பஞ்சு மிட்டாய் சேலை கட்டி
பட்டுவண்ண ரவிக்கை போட்டுக்
கஞ்சி கொண்டு போறவளே
நெஞ்சுக்குள்ள நீ வாரிய… புள்ள

தும்ப பூவு மல்லு வெட்டி
தொட தெரிய ஏத்தி கட்டி
வம்பு பண்ண வாரவுகளே
வழி விடுங்க நேரமாச்சு.

ஏழ புத்திக்குள்ள சுத்துது கிறுக்கு யாஹ்ஹ்ஹ
இடுப்பு கொசுவத்துல சூட்சுமம் இருக்கு
நீ நெளிஞ்சு போகையில நெஞ்சுல சூழலுக்கு

வாட கத்தடிச்சு வாட்டுது மாமா
என் கூட வந்து குச்சிக்குள்ள ஒத்திக மாமா
உன் கூடலுக்கு சூடு கொஞ்சம் ஏத்திக்க மாமா

உன் கண்ணு ரெண்டும் நாவற்பழம்
காச்சிருக்கு கொய்யாப்பழம் மூடி வைக்காத
திங்காம வீணடிக்காத

அட புல்லறுக்க போகையில
புள்ள வரம் கேட்க வந்தேன்
தள்ளி நிக்காத மனச கிள்ளி வைக்காத

அடியே பஞ்சு மிட்டாய் சேலை கட்டி
பட்டுவண்ண ரவிக்கை போட்டுக்
கஞ்சி கொண்டு போறவளே
நெஞ்சுக்குள்ள நீ வாரிய புள்ள

ஓரஞ்சாரம் பார்த்து ஒதுங்கனும் பதமா
பின்ன ஓட தண்ணிக்குள்ள
முங்கி குளிக்கணும் சுகமா
மெல்ல லாவகம் உன்முதுகை தேய்கனும் இதமா

மாமா பம்முறியே பொழுதுக்கு மேல
நீ கம்மன்காட்டு மூலையில்லே கள்ளன போல
நான் ஒத்தையில தான் வருவேன் உன் நெனைப்பால

அட மஞ்ச காட்டு ஓரதில்லே
மத்தியான நேரத்தில
காத்திருக்கட்டா தினமும் காத்திருக்கட்டா

அட வெள்ளைச்சோள சோறு வெச்சு
காரப்பூவ ஏழரைச்சு
ஊட்டி விடட்டா உனக்கு ஊட்டி விடட்டா

ஏஹ் புள்ள… பஞ்சு மிட்டாய் சேலை கட்டி
பட்டுவண்ண ரவிக்கை போட்டுக்
கஞ்சி கொண்டு போறவளே
நெஞ்சுக்குள்ள நீ வாரிய

தும்ப பூவு மல்லு வெட்டி
தொட தெரிய ஏத்தி கட்டி
வம்பு பண்ண வாரவுகளே
வழி விடுங்க நேரமாச்சு. யாஹ்ஹ்ஹ…

كلمات أغنية عشوائية

كلمات الأغنية الشائعة حالياً

Loading...