kalimah.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

kuganeshwaran, sutharshini - naanagha naanum illai كلمات الأغنية

Loading...

naanagha naanum illai lyrics
பல்லவி

நானாக நானும் இல்லை
ஏனோ மாறுது வானிலை
நதியோடு ஆட்டம்போடுது
அந்திநேர பூமழை..
விழிபார்த்து சொல்ல வேண்டும் விக்கித்திக்கும் காதலை
கிளியே நீயே கேளு கேளு
இதயம் பாடும் பாடலை…

அனுபல்லவி

ஆண்:

பொன்னள்ளி கொடுத்தாலும் பூவள்ளிக்கொடுத்தாலும் நீதானே வேண்டுமென்பேன்..

பெண்:

ஊர் என்னை வெறுத்தாலும் உறவென்னை தடுத்தாலும் நீ மட்டும் போதும் அன்பே..

சரணம்_01

ஆண்:

நாள்தோறும் உன்னோடு
நான் வாழ வேண்டும்
நீ இல்லா நொடிகூட
சாகத்தோன்றும்…
பெண்:

என்தோட்ட பூவெங்கும்
நீதானே வாசம்..
யாருக்கும் புரியாது
நாம் கொண்ட நேசம்..

ஆண்:

பொன்னள்ளி கொடுத்தாலும் பூவள்ளிக்கொடுத்தாலும் நீதானே வேண்டுமென்பேன்..

பெண்:

ஊர் என்னை வெறுத்தாலும் உறவென்னை தடுத்தாலும் நீ மட்டும் போதும் அன்பே..

சரணம்_02

பெண்:

மலர்கூட சில நாளில்
சருகாக போகும்..
என் மனம் வந்து எந்நாளும்
உன் பெயரை கூவும்…

ஆண்:
குணமற்ற மனம்தானே குரங்காகத்தாவும்…
நான் மனம் விட்டு சொல்கின்றேன் நீதானே யாவும்…

நானாக நானும் இல்லை
ஏனோ மாறுது வானிலை
நதியோடு ஆட்டம்போடுது
அந்திநேர பூமழை..

விழிபார்த்து சொல்ல வேண்டும் விக்கித்திக்கும் காதலை
கிளியே நீயே கேளு கேளு
இதயம் பாடும் பாடலை…

ஆண்:

பொன்னள்ளி கொடுத்தாலும் பூவள்ளிக்கொடுத்தாலும் நீதானே வேண்டுமென்பேன்..

பெண்:

ஊர் என்னை வெறுத்தாலும் உறவென்னை தடுத்தாலும் நீ மட்டும் போதும் அன்பே..

كلمات أغنية عشوائية

كلمات الأغاني الشهيرة

Loading...