kalimah.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

kingsly sivapragasam - visuvaasi كلمات أغنية

Loading...

விசுவாசத்தினால் நீதிமான் பிழைப்பான்
விசுவாசிப்பவன் எதைக்குறித்தும் பதறான் _ 2
இலக்கை நோக்கி தொடருபவன்
போராட்டம் வந்தாலும் அஞ்சாதவன் – 2

அவன் தலைமேல் மகிழ்ச்சி தங்கும் , அவன் சந்ததி செழித்திடும்அவன் எல்லைக்குள் சமாதானம் , சுகமாய் வாழுவான் – 2

கர்த்தர்மேல் நம்பிக்கை வைத்து அவரையே சார்ந்து நடப்பவன்.. (விசுவாசி)
தண்ணீரண்டை நாட்டப்பட்ட இலையுதிரா மரம் போன்றவன் .. (விசுவாசி)
உஷ்ணம் வருகிறதை காணாமல் நீர்க்காலுக்குள் வேர் கொண்டவன்
மழை தாழ்ச்சியான வருஷத்திலும் தப்பாமல் கனிகளை கொடுப்பவன் ..

உத்தம இருதயத்தோடு நீதியை நடப்பிக்கும் மனிதனே.. (விசுவாசி)
மனதார சத்தியம் பேசி, நாவினால் புறங் கூறாதவன் .. (விசுவாசி)
தீங்கு தன் தோழனுக்கு செய்யாதவன்,நிந்தை பேச்சுகள் எடுக்காதவன்
ஆணை செய்ததில் நஷ்டங்கள் வந்தாலும், வார்த்தையில் தவறாமல் இருப்பவன்

كلمات أغنية عشوائية

كلمات الأغنية الشائعة حالياً

Loading...