kalimah.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

karthik & suchitra - yaradu (from "kavalan") كلمات الأغنية

Loading...

யாரது… யாரது யாரது…
யார் யாரது சொல்லாமல்
நெஞ்சத்தை தொல்லை செய்வது

மூடாமல் கண் ரெண்டை மூடிச் செல்வது
யாரது… யாரது யாரது… யாரது

நெருங்காமல் நெருங்கி வந்தது
விலகாமல் விலகி நிற்பது
விணையாக கேள்வி தந்தது
தெளிவாக குழம்ப வைத்தது
யாரது… யாரது யாரது… யார் யாரது

என்னில் ஒரு சடுகுடு சடுகுடு
காலை மாலை நடக்கிறதே
கண்ணில் தினம் கதக்களி கதக்களி
தூங்கும் போதும் தொடர்கிறதே

என்னில் ஒரு சடுகுடு சடுகுடு
காலை மாலை நடக்கிறதே
கண்ணில் தினம் கதக்களி கதக்களி
தூங்கும் போதும் தொடர்கிறதே

இரவிலும் அவள் பகலிலும் அவள்
மனதினை தொடுவது தெரிகிறதே
கனவிலும் அவள் நினைவிலும் அவள்
நிழலென தொடர்வது புரிகிறதே
இருந்தாலும் இல்லா அவளை இதயம் தேடுதே
யாரது… யாரது யாரது… யார் யாரது

உச்சந்தலை நடுவினில் அவள் ஒரு
வேதாளம் போல் இறங்குகிறாள்
என்னுள் அவள் இறங்கிய திமிரினில்
இம்சை ராஜ்ஜியம் தொடங்குகிறாள்

அவள் இவள் என எவள் எவள் என
மறைவினில் இருந்தவள் குழப்புகிறாள்
அவளது முகம் எவளையும் விட
அழகிலும் அழகென உணர்த்துகிறாள்
இருந்தாலும் இல்லாமல்
அவள் கலகம் செய்கிறாள்
யாரது… யாரது யாரது… யார் யாரது

சொல்லாமல் நெஞ்சத்தை
தொல்லை செய்வது
மூடாமல் கண் ரெண்டை மூடிச் செல்வது
யாரது… யாரது யாரது… யாரது

நெருங்காமல் நெருங்கி வந்தது
விலகாமல் விலகி நிற்பது
விணையாக கேள்வி தந்தது
தெளிவாக குழம்ப வைத்தது

كلمات أغنية عشوائية

كلمات الأغاني الشهيرة

Loading...