kalimah.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

joshuah heby - kattazhagu menikku كلمات الأغنية

Loading...

rap 1 [josh] :
கட்டழகு மேனிக்கு இங்கு கட்டளைகள் இல்லை
அவள் விட்டு சென்ற பார்வையாலே நித்தம் நித்தம் தொல்லை
எனை திட்டம் தீட்டி கவுத்த சதிகார பெண்மணி – இனி
உன்னை விட மாட்டேனே கலங்காதே கண்மணி
ஒரு வார்த்தையிலே சொல்லிட முடியாத பெண்ணடா
மறு வார்த்தை எனக்கில்லை நான் தொலைந்தேனே மெல்லடா
இரு உள்ளம் மட்டும் சேர்வதே அதன் பெயர் தான் காதலா? – இனி
நீயும் நானும் இணைந்தால் ஜொலிப்போமே கடலாய்

hook:
கடக்கிறேன் என் பொழுதை உன் நினைவாலே
நெருங்கினேன் பக்கம் ஆசையில் தன்னாலே
தொடர்கிறேன் காதல் ஏக்கத்தில் பின்னாலே
கரைகிறேன் மெதுவாய் உன் சிரிப்பாலே

rap 2 [raj] :
மெதுவாக சிரித்தால் உண்டாகும் நடுக்கம் – உன்
கூந்தல் கழிந்தால் அடி காய்ச்சல் அடிக்கும் – என்
கால்கள் உன்னையே பின் தொடர்ந்து நடக்கும் – பொல்லாத
மோகம் என்னுள் இன்றோடு விலகும்
காதலை விதைத்தாயடி என்னுள்ளே
வரமாக நினைப்பேன் நான் உன்னையே
உயிராக உதித்தாய் என் நெஞ்சினிலே
மனதோடு கலந்தாய்

verse [raj] :
ஒரு கூடைபந்தை போலே என்னை கூண்டினுலே இட்டாய்
தடுமாறும் என் நெஞ்சத்தை தனி காட்டிலே விட்டாய்
உன் மோகபுன்னகையாலே கரைந்தேனே சொட்டு சொட்டாய்
தெருவெல்லாம் காந்தம் போலென்னை உன் பின்னால் வர வைத்தாய்
நொடிஎல்லாம் உன் பெயர் சொல்லி என்னை முற்றிலும் மாற்றியே விட்டாய்
முடிவில் நீ உன் நினைவாலே மூழ்கடித்து சென்ற விட்டாய்
கடிகாரமுள்ளை போலே தனிமையிலே சுற்ற வைத்தாய்
நிஜமெல்லாம் முற்றும் பொய்யாய் ஆக்கித்தான் சென்று விட்டாய்

rap 3 [josh] :
ஹே கோமலவல்லி எதுக்கு போறடி தள்ளி எனக்கு உங்கம்மா தாண்டி வில்லி
கொஞ்சம் எடுத்து நீ சொல்லி மாத்த பாரு அத்த மனச மறக்க சொல்லு பழச மொற மாமன் நானும் உன்ன கூடாதாடி ஒரச மாமன் உன்ன நினைக்க மார்புல உன்ன அணைக்க
ஆச ரொம்ப வச்சிருக்கேன் கூடாதடி கலைக்க
கண் ஜாட காட்டி போர காதல் தீயே உனக்காக காத்திருப்பேன் காதல் ரதியே

hook:
கடக்கிறேன் என் பொழுதை உன் நினைவாலே
நெருங்கினேன் பக்கம் ஆசையில் தன்னாலே
தொடர்கிறேன் காதல் ஏக்கத்தில் பின்னாலே
கரைகிறேன் மெதுவாய் உன் சிரிப்பாலே

كلمات أغنية عشوائية

كلمات الأغاني الشهيرة

Loading...