kalimah.top
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

hiphop tamizha - veedhikor jaadhi كلمات أغنية

Loading...

வீதிகோர் ஜாதியும்
ஜாதிக்கு வீதியும்
கேட்காதா நாதியும்
கிடைக்காதா நீதியும்
எல்லாவற்றுக்கும் ஒரு உச்சகட்டம்
எனை தட்டி கேட்டால்
அது குற்றம் குற்றம்

யார் இங்கே நாயகன்
யார் இங்கே தீயவன்
ஊழலில் ஊழியம் செய்தவன்

ஊதியம் போக பாதிக்கு மேலே
எனகென எடுத்ததில்
தவறில்லை என்கின்ற
மனநிலை வருவது
எதனால் நீ சரி இல்லை

அதனால் காசு வாங்கி
நீயும் ஓட்டு போட்ட
ஓட்டு போட நீயும் நோட்ட கேட்ட

மக்களின் வேலைக்காரன் நான்
என்கிட்டே நீ காசு கேட்டதால்
உன்கிட்ட குடுக்க எங்கிருந்து எடுக்க
மந்திரி மந்திரி மந்திரிடா
ராஜ ராஜ தந்திரிடா எந்திரிடா
இது என் தப்பு இல்லை
உன் தப்பு மாப்பு
வெச்சுட்டான் ஆப்பு
காமன் மேன்க்கு இங்கே
காமம் ஏறி போச்சு
நாட்டோட மானம்
விமானம் ஏறி போச்சு

நான் மட்டும் நல்லவன்
போல் இருந்து என்னாச்சு
பொறுப்பதும் மறப்பதும்
மக்களின் மான்பாச்சு

இனி என்னோட ஆட்சி
என் அரசியல் மாட்சி
கண் கொண்டு பார்
வீழ போவது நாம் அனைவரும்தான்

பணம் இனம் மொழி
மதம் பிரி வினை சுலோபம்

அலை கடல் என திரண்டு
எனக்கு சிலை வடித்திடும் படை
அடிமைகள் சுடும் வடை
அடைக்கலம் அந்த சிறை
வேட்டி சட்டை போட்ட
மாடர்ன் கட்டை
என்னை நம்பி ஓட்டு போட்டால்
நாமம் பட்டை

நாற்காலி என் தாலி
கட்டமே வாழ்வானே
ஐந்தாண்டுக்கு ஒரு முறை
நான் வந்தேன் உன் அருகில்
நீ வேண்டான்னு சொன்னாலும்
தருவேனே எல்லாம் கையில்

ஏன்னா நான் நாட்டுக்கு ராஜா
ஏமாந்து போனது நீதான்
ஏன்னா நான் நாட்டுக்கு ராஜா
ஏமாந்து போனது நீதான்

ஒழைசாச்சு மறசாச்சு
குழி தோண்டி பொதைசாச்சு
ஊருக்கு முன்னாடி
வாய் கிழிய சிரிச்சாச்சு
பதவிக்கு வரும்போதே
இழந்தாச்சு மனசாட்சிக்கு
பேருக்கு மட்டும்தான்
மக்களோட ஆட்சி
ஆனா

இனி என்னோட ஆட்சி
என் அரசியல் மாட்சி
கண் கொண்டு பார்
வீழ போவது நாம் அனைவரும்தான்

இனி என்னோட ஆட்சி
என் அரசியல் மாட்சி
கண் கொண்டு பார்
வீழ போவது நாம் அனைவரும்தான்

வீழாதே வீரனே வீரனே
வீழ்ந்தாலும் வாழும் உன் பெயர்

ஐ அம் ஏ பிரக்டிகள் காய்
நாளைக்கவே நான் பொய்
எதிர் கட்சில சேர்ந்திருவேன்
சேர்ந்து ஆளுங்கட்சியை
திட்ட ஆரம்பிச்சுருவேன்

நேத்து வரையில் எவன் திட்டு வாங்குனானூ
அவன் எல்லாம் கைதட்டுவான்
அவ்வளவு தான் எங்களுக்கு தேவை பதவி
பதவிக்கு தேவை வோட்டு
வோட்டுக்கு தேவ காசு
அந்த காச குடுத்த நீ வோட் போடா போற

كلمات أغنية عشوائية

كلمات الأغنية الشائعة حالياً

Loading...