
agr - paravayin kootil كلمات أغنية
என் வாழ்க்கைல வந்தது மூணே மூணு letter
still i remember my first letter
பிரபா நீ என்ன தேடி இருப்பனு தெரியும்
நானும் அம்மாவும் இங்க மஹாராஷ்ட்ரால தூரத்து மாமா வீட்ல இருக்கோம்
நீ வரதுகோ letter ஏழுத்ரதுகோ ஏத்த சமயம் வரப்போ நான் சொல்றேன்
நேரத்துக்கு சாப்பிடு வாரத்துக்கு மூணு நாள் ஆவது குளி அந்த socksஅ தொவச்சு போடு நகம் கடிக்காத கடவுள வேண்டிக்கோ
ஆனந்தி
பறவையே எங்கு இருக்கிறாய்
பறக்கவே என்னை அழைக்கிறாய்
தடயங்கள் தேடி வருகிறேன் அன்பே
பறவையே எங்கு இருக்கிறாய்
பறக்கவே என்னை அழைக்கிறாய்
தடயங்கள் தேடி வருகிறேன் அன்பே
அடி என் பூமி தொடங்கும் இடம் எது நீ தானே
அடி என் பாதை இருக்கும் இடம் எது நீ தானே
பார்க்கும் திசைகள் எல்லாம் பாவை முகம் வருமே
மீன்கள் கானல் நீரில் தெரிவதுண்டோ
கண்கள் பொய்கள் செல்வதுண்டோ
நீ போட்ட கடிதத்தின் வரிகள் கடலாக
அதில் மிதந்தேனே பெண்ணே நானும் படகாக
பறவையே எங்கு இருக்கிறாய்
பறக்கவே என்னை அழைக்கிறாய்
தடயங்கள் தேடி வருகிறேன் அன்பே
குரல்: இளையராஜா
இசை: யுவன் சங்கர் ராஜா
பாடல்: நா முத்துக்குமார்
உன்னோடு நானும் போகின்ற பாதை
இது நீளதோ தொடு வானம் போலவே
கதை பேசி கொண்டே வா காற்றோடு போவோம்
உரையாடல் தீர்ந்தாலும் உன் மௌனங்கள் போதும்
இந்த புள் பூண்டும் பறவை நாமும் போதாதா
இனி பூலோகம் முழுதும் அழகாய் போகாதா
முதல் முறை வாழ பிடிக்குதே
முதல் முறை வெளிச்சம் பிறக்குதே
முதல் முறை முறிந்த கிளை ஒன்று பூக்குதே
முதல் முறை கதவு திறக்குதே
முதல் முறை காற்று வருகுதே
முதல் முறை கனவு பலிக்குதே அன்பே
ஏழை காதல் மலைகள் தனில் தோன்றுகின்ற
ஒரு நதி ஆகும்
மண்ணில் விழுந்தும் ஒரு காயமின்றி
உடையாமல் உருண்டு ஓடும்
நதி ஆகிடுவோம்
இதோ இதோ இந்த பயணத்திலே
இது போதும் கண்மணி வேறென்ன நானும் கேட்பேன்
பிரிந்தாலும் மனதிலே இந்த நொடியில் என்றும் வாழ்வேன்
இந்த நிகழ்காலம் இப்படியே தான் தொடராதா
என் தனியான பயணங்கள் இன்றுடன் முடியாதா
முதல் முறை வாழ பிடிக்குதே
முதல் முறை வெளிச்சம் பிறக்குதே
முதல் முறை முறிந்த கிளை ஒன்று பூக்குதே
முதல் முறை கதவு திறக்குதே
முதல் முறை காற்று வருகுதே
முதல் முறை கனவு பலிக்குதே அன்பே
ஆனந்தி ஆனந்தி
ஊர் வந்துர்சுனு நெனைக்கிறேன் எங்க எறங்கனும்
كلمات أغنية عشوائية
- dark tranquillity - the pitiless كلمات أغنية
- cali - à cet instant je pense à toi كلمات أغنية
- les fatals picards - le reich des licornes كلمات أغنية
- robb bank$ - bad vibes forever كلمات أغنية
- dylan fuentes - me acostumbré كلمات أغنية
- tory lanez - when you're comfortable كلمات أغنية
- 3 vallejo - el chueco كلمات أغنية
- merry - charlie كلمات أغنية
- jasmine - realize كلمات أغنية
- elaiza - cinderella كلمات أغنية